Pages

Sunday, March 3, 2013

வட மாகாணசபைத் தேர்தலின் போது சர்வதேச கண்காணிப்பாளர்கள் அவசியம்: பிரித்தானியா!

இலங்கையின் வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறும்போது அதனை கண்காணிக்க வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் அழைக்கப்பட வேண்டும் என்று பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது.

பிரித்தானியாவின் வெளியுறவு அலுவலக சிரேஷ்ட அமைச்சர் சயீடா வர்சி இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இலங்கையின் வடக்கு மாகாண சபைத் தேர்தல் நியாயமானதாக இடம்பெற வேண்டும் என்பதில் பிரித்தானிய அரசாங்கம் உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகத் தமிழர் பேரவையின் நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனை கூறியுள்ளார். இந்த வருடத்தில் இலங்கை சர்வதேசத்தின் கண்காணிப்பில் இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

எனவே இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துடன் இணைந்து செயற்படும் என்று பிரித்தானியா எதிர் பார்ப்பதாக வர்சி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முழுமையாக அமுல்செய்யப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்!