Open top menu

இலங்கையில் போர்க்குற்றவாளியான மகிந்த ராஜபக்ச மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடலூர் ஆட்சியர் அலுவலம் முன்பு சமூக ஆர்வலரான தீக்குளித்த நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவர் தீக்குளித்ததால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில், அங்கிருந்தோர் தீயை அணைத்து மிகவும் ஆபத்தான நிலையில் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அத்துடன், “இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இதற்காக எனது உயிரே முதல் வாக்காக இருக்கட்டும் என தீக்குளித்த நபர் கோஷமிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இனப்படுகொலை செய்த ராஜபக்சவை கூண்டிலேற்றக் கோரி முன்னாள் இந்திய இராணுவ வீரர் தீக்குளிப்பு

தமிழினப்படுகொலை செய்த ராஜபக்சவை ஐ.நா. மன்றம் தண்டிக்க கோரி முன்னாள் இந்திய இராணுவ வீரரும் நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டாளருமான தோழர் இளமணி வயது 44 தீக்குளித்தார்.

இந்திய தேசியக்கொடியை தனது தோளில் முத்திரையாக பச்சை குத்தியிருந்த அவர், இந்திய மத்திய அரசு இலங்கையோடு இணைந்து தமிழ் இனப்படுகொலையை நட்த்தியது கண்டு மனம் பொறுக்காமல் தன் தோளில் குத்தியிருந்த தேசியக்கொடியை தீ இட்டு பொசுக்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு முன்னாள் இராணுவ வீரரின் மன நிலையே இப்படியென்றால். மொத்த தமிழினத்தின் மனமும் கொதித்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்திய ஆட்சியாளர்கள் உணர்வார்களா?

40 சதவிகித தீப்புண்களோடு உயிருக்கு போராடும் அவர் நலம் பெற்று மீண்டு வந்து எம் தமிழ் சமூகத்துக்கு பணியாற்ற வேன்டும் என்று இறைவனிடம் பிரார்த்திப்போம்.

இதற்கிடையில் சம்பவ இடத்தில் இருந்து மணி வைத்திருந்த மனுவாக எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தின் முதல் பக்கத்தில் ஈழ தமிழர்கள் வெல்லட்டும், இலங்கை அதிபர் ராஜபக்ச ஒழிக என்று எழுதப்பட்டு இருந்தது.

மேலும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வெளிநாட்டில் கப்பல் கட்டும் துறையில் அதிகாரியாக பணியாற்றினேன். அப்போது இந்தியாவின் நாட்டுப்பற்று என்னை கவர்ந்தது. இதனால் எனது வலது கையில் இந்தியன் என்றும், தேசிய கொடியையும் பச்சை குத்தி வைத்துள்ளேன். எனது உடலை தானமாக வழங்கியுள்ளேன். 26 முறை இரத்ததானம் கொடுத்துள்ளேன்.

சுனாமி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதை எதிர்த்து ஜனநாயக முறையில் கடந்த 5 ஆண்டுகளாக போராடி வருகிறேன். இந்நிலையில் இப்பிரச்சினைக்கு நீதி வேண்டி வருகிற 11–ந் தேதி கடலூர் அல்லது சென்னை உயர்நீதிமன்றம் முன்பு சாகும் வரையில் உண்ணாவிரதம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தேன்.

ஆனால் இதை சார்ந்த ஊழல் வாதிகள் அதற்கும் இடையூறு செய்து திசை திருப்பி விடுவார்கள். ஆகவே எனது மரணத்திற்கு முன்னால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மரணத்திற்கு பிறகு தான் சுனாமி வீட்டு ஊழலுக்கு உயிர்பிறக்கும் என்ற நம்பிக்கையில் என் ஜீவனை நான் அழித்துக் கொள்கிறேன்.

மேலும் இலங்கையில் 1 லட்சத்து 76 ஆயிரம் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சவை தண்டிக்க வேண்டும். அதற்காக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தர வேண்டும். மேலும் எனது ஈழ தமிழ் சமுதாயம் தனிநாடு பெற்று, எனது உயிரின் மக்கள் நன்றாக நல்வாழ்வு பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எனது தாய், மனைவி, மகள், மருமகன், மகன்களுக்கு எத்தனையோ துன்பங்களை கொடுத்து விட்டேன். நீங்கள் எனக்கு கிடைத்தது பெரும் பாக்கியம். எனது இறுதி சடங்கை தற்போது உள்ள வீட்டில் வைத்து என்மீது இந்திய தேசிய கொடியை போர்த்தி எடுத்து நல்லவாடு இடுகாட்டில் என்னை எரித்து என்நினைவாக சிறு கட்டிடம் கட்ட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் உருக்கமாக கூறியுள்ளார்.

முன்னதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மணி கூறுகையில்,

ஊழலுக்கு எதிராக அன்னாஹசாரே போராடி வருகிறார். அவரது வழியில் ஊழலற்ற இந்தியா உருவாக வேண்டும். சுனாமி வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது. இது பற்றி உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். கொடுங்கோலன் ராஜபக்சவுக்கு எதிராக ஐ.நா.சபையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து அவரை தண்டிக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்காக எனது உயிரை கொடுப்பதில் பெருமை அடைகிறேன் என்றார்.
Tagged